தமிழ்நாடு

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை

சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கிராம சுகாதார திட்ட கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவில் ரகுநாதன், லதா, மணிமாலா, சுவேந்தரன் ஹம்சாவர்த்தினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற இந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிவகாசியில் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த விவகாத்த்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவதுறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..?

சாத்தூரை போல், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனையின் டீன் வசந்தாமணி, கீழ்பாக்கம் மருத்துவமனை மூலம் ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பதற்கான முறையான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்