நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிட்புல் நாய் கடித்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொப்பப்பட்டியைச் சேர்ந்த பரணிக்கு சொந்தமான பிட்புல் நாயை, அவரது நண்பர் அறிவழகன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், அறிவழகன் ஜிம்முக்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் கவிதாவை அந்த நாய் திடீரெனக் கடித்துக் குதறியது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கவிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.