தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் தளர்வுகளா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தந்தி டிவி

ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் தளர்வுகளா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு குறித்து முடிவெடுக்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மே 24ம் தேதி முதல் அமலுக்கு வந்த தளர்வுகளற்ற ஊரடங்கு, ஜூன் 7 வரை நடைமுறையில் இருந்தது. அதன்பிறகு, பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தினசரி 400க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி