ஒசூர் அருகே தேன்கனிகோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகிலுள்ள பாலதொட்டனப்பள்ளி, குண்டாலம், அகலகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ரோஜா செடிகளை சேதப்படுத்தி சென்றன. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.