மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மனஉளைச்சலில் இருந்த தம்பதி, சோளிங்கர் அருகே சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகண்டராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா- சுகன்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவிற்கு
போதிய வருமானம் இல்லாமல் சிகிச்சை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, வாலாஜா – சோளிங்கர் சாலையோர இடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து போலீசார் சடலங்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.