தமிழ்நாடு

DMK | Congress | “ரூ.4,000 கோடி செலவிட்டும் சென்னையில் மழைநீர் தேங்குவது ஏன்?“ கணபதி சிவக்குமார்

“ரூ.4,000 கோடி செலவிட்டும் சென்னையில் மழைநீர் தேங்குவது ஏன்?“ கணபதி சிவக்குமார்

thanthitv

DMK | Congress | “ரூ.4,000 கோடி செலவிட்டும் சென்னையில் மழைநீர் தேங்குவது ஏன்?“ கணபதி சிவக்குமார்

#DMK #Congress #ChennaiRains

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கனமழையின்போது பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது ஏன் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் 95 சதவீத வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையிலும், சென்னையில் மீண்டும் தண்ணீர் தேங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதில், மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மழைநீர் வடிகால் பணிகளின் உண்மை நிலை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை எனக் கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்றும் கணபதி சிவக்குமார் சாடியுள்ளார். சென்னை மட்டுமின்றி கோவை மாநகராட்சியிலும் வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 4,000 கோடி ரூபாய் செலவினங்கள் குறித்தும், வடிகால் பணிகளின் தரம் குறித்தும் உரிய நிதித் தணிக்கை மற்றும் தொழில்நுட்ப விசாரணை நடத்தத் முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு