தமிழ்நாடு

Vinayagar Statue| விநாயகர் சிலை கரைக்கும் போது.. நல்லது செய்ய நினைத்தவர் கொடூர கொலை.. சிக்கிய பெண்

விநாயகர் சிலை கரைக்கும் போது.. நல்லது செய்ய நினைத்தவர் கொடூர கொலை.. சிக்கிய பெண்

thanthitv

விநாயகர் சிலை கரைக்கும் போது.. நல்லது செய்ய நினைத்தவர் கொடூர கொலை.. சிக்கிய பெண் #vinayagarstatue #vinayagarchathurthi கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்றவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்கவரப்பட்டு மற்றும் கீழ்கவரப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது, சண்டையைத் தடுக்க முயன்ற ராமு என்ற 45 வயது நபர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த ராமுவை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, அவரது மனைவி அம்பிகா, மகன் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddlore | 6 முறை வெறியோடு பாய்ந்த கத்தி - முதல்வர் மருந்தகத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளம்பெண்

Armstrong Case Update| ``ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடி தொடர்பு’’ - CBI சொன்ன ஷாக்கிங் தகவல்

Vinayagar Chathurthi | விநாயகர் சிலைகளை கரைக்க தமிழக அரசு புதுவித ஏற்பாடு?

``அவர் என் தம்பி.. அவரு படிக்கதான் நான் அமைச்சராவே வந்திருக்கேன்’’ - அமைச்சர் வன்னியரசு விளக்கம்

DMKvsMDMK ``திமுகவில் இணைய விரும்பினேனா.. செத்தாலும்..’’உணர்ச்சி பிழம்பாய் வெடித்த துரை வைகோ