அறந்தாங்கி அடுத்த ஏம்பலில் 22 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சமூதாய பெண்களை இழிவாக பேசி சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானது.