``நாங்க Body-ஏ வாங்க மாட்டோம்.. திரும்ப தோண்ட சொல்வோம்.. CM சார்..’’ - ஒரு முடிவோடு இருக்கும் மக்கள்
#ramanathpuramissue #keelakaraiissue
ராமநாதபுரம் அருகே சின்ன மாயாகுளம் பகுதியில் கடந்த 15ஆம் தேதி கணேசன் என்ற ரியாஸ் மற்றும் கோபி ஆகிய இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்த நிலையில், நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோபியின் உடலை மட்டும் பெற உறவினர்கள் சம்மதித்துள்ளனர். இருப்பினும், ரியாஸின் இறப்பில் உள்ள மர்மம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவரது உடலைப் பெற மாட்டோம் என அவரது உறவினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.