TN Rain | Heavyrain | கனமழை எச்சரிக்கை.. வீக் எண்டில் வெறிச்சோடிய டூரிஸ்ட் ஸ்பாட்
#nilgiris #tnrain #heavyrain #rainfall #weatherupdate #thanthitv
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் முக்கிய சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பயணிகளைப் பணியாளர்கள் திருப்பி அனுப்பியதால், ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.