தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்–மூணாறு தேசிய நெடுஞ்சாலையில், போடிமெட்டு மலை அடிவாரப் பகுதியான முந்தல் கிராமத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் கேரள எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சோதனை முகாம், இரும்பு தடுப்புகள் மற்றும் செக்போஸ்ட் கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும், குடியிருப்பு வீடுகள், கடைகள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கேரளா செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும், இருசக்கர வாகனப் பயணத்தைத் தவிர்க்கவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்