தமிழ்நாடு

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரும்புத்திரை படம் தயாரிக்க விஷால் தன்னிடம் கடன் வாங்கியதாகவும், பணத்தின் ஒரு தொகை பாக்கியை சக்ரா திரைப்படத்தின் வெளியீட்டில் தருவதாக விஷால் தெரிவித்ததாக கூறியுள்ளார். இரும்புத்திரை பைனான்ஸ்காக விஷால் கொடுத்த உறுதிமொழி பத்திரங்களை இயக்குநர் சிவக்குமாரிடம் தான் வழங்கியதாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, உறுதிமொழி பத்திரங்கள் திரும்பக் கிடைக்கவில்லை, அதை கண்டுபிடித்து தாருங்கள் என, காவல்துறையில் விஷால் புகார் அளித்ததை சுட்டிக்காட்டிய ஆர்.பி.சௌத்ரி, உறுதிமொழி பத்திரங்கள் யாரிடம் இருந்தாலும் அதை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு