விருதுநகர் மாவட்டம் பிறவிபட்டி கிராமத்தை சேர்ந்த மனோஜ்பாண்டியனும், காலபெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் ரஞ்சிதாவிற்கு, கடந்த வெள்ளியன்று வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கோவில்பட்டி அருகே மலையடிவாரத்தில் ரஞ்சிதாவும், மனோஜ் பாண்டியனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட கிராமத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.