திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்த வெளி சாக்கடையில் அதிக அளவு உற்பத்தியாகும் கொசுக்கள் மற்றும் அங்கு நிலவும் சுகாதார சீர்கேடே நோய் பரவலுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.