தமிழ்நாடு

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பேசியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டதால், அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.

தந்தி டிவி

* இடைத் தேர்தல் யாருக்கு சாதகம் என்ற தலைப்பில் தந்தி டி.வி.யின் 'மக்கள் மன்றம்' நிகழ்ச்சி, விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடைபெற்றது. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக சார்பில் கான்ஸ்டைன்டன் ரவீந்திரன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன், நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

* இந்த நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள், விருதுநகர் மாவட்டத்துக்கு பெருமையானது முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தது, ஆனால், அல்லம்பட்டியில் உள்ள காமராஜர் சிலையின் பின்புறம் டாஸ்மாக் கடை இருக்கிறது என்றார்.

* இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காமராஜர் சிலை அருகே செயல்படும் கடை மூடப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி, அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இரவு எட்டே முக்கால் மணியளவில், அந்த டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதை அடுத்து, காமராஜர் சிலை அருகே செயல்பட்ட அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக, டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்