தமிழ்நாடு

கண், மூக்கில் மிளகாய் தூளை தூவி பெற்ற குழந்தையை கொன்ற தந்தை

விருதுநகர் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியை சேர்ந்த திவாகரன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதில் சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில் அவரை திவாகரன் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுபாஷினி அளித்த புகாரின் பேரில் திவாகரனை போலீசார் கைது செய்திருந்தனர். ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த திவாகரன், சுபாஷினியை திருமணம் செய்துள்ளார். ஆனால் சுபாஷினிக்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என கூறி அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரச்சினை அதிகரிக்கவே குழந்தை விஜயராஜை கழுத்தை நெறித்து கொன்றதோடு கண் மற்றும் மூக்கில் மிளகாய் பொடியை கொட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் திவாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்