தமிழ்நாடு

VINAYAKA MISSIONS | Karaikal | காரைக்காலில் விநாயகா மிஷனின் புதிய அதிநவீன மருத்துவமனை திறப்பு

காரைக்காலில் விநாயகா மிஷனின் புதிய அதிநவீன மருத்துவமனை திறப்பு

thanthitv

VINAYAKA MISSIONS | Karaikal | காரைக்காலில் விநாயகா மிஷனின் புதிய அதிநவீன மருத்துவமனை திறப்பு #karaikal #VINAYAKAMISSIONS #thanthitv காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக புதிய அதிநவீன மருத்துவமனை கட்டிடத்தைத் திறந்து மற்றொரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. மருத்துவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், 300 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அதிநவீன மருத்துவமனை கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில் நவீன அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை, மகப்பேறு பிரிவு மற்றும் இதய நோய்களைக் கண்டறியும் அதிநவீன 'கேத் லேப்' (Cath Lab) வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அனைத்து நோய்களையும் துல்லியமாகக் கண்டறியும் புதிய 'எம்.ஆர்.ஐ' (MRI) ஸ்கேன் கருவியும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் என்.வி. சந்திரசேகர், அறங்காவலர் அருணாதேவி சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்பாளர்கள் இந்த அதிநவீன வசதிகளை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதிர், மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சேரன் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு இந்த அதிநவீன மருத்துவமனை கட்டிடம் பெரும் பயனுள்ளதாக அமையும் எனப் பல்கலைக்கழக துணைத் தலைவர் என்.வி. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

#BREAKING || Kovi | Police | அதிகாலையில் அதிரடி... கோவை முழுவதும் இறங்கிய 400 போலீஸ்

Minister NirmalKumar | ''அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும்..'' | அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி

TN Governor | CPI | ``ஆளுநர் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" | CPI சண்முகம் கண்டனம்

Breaking | Minister KA.Sengottaiyan | "15 நாட்களில்..'' | குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

BREAKING || "இந்தியாவிலேயே முதல் முறையாக Youtube Live-ல் TNPL" - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்