கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் கலவர தடுப்பு வாகனம் மூலம் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது. விழுப்புரம் சிக்னல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மே 3ஆம் தேதி வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.