விழுப்புரம் நகரில் பூந்தோட்ட பாதை அருகேயுள்ள கோலியனூரான் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசி கொலை செய்த பெண்ணை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பின்னர் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனாட்சி என்பதும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் அவருக்கு, மற்றொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதனால், அந்த குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.