தமிழ்நாடு

``வில்லேஜ் ஸ்டைல் `மயில்' கறி செய்வது எப்படி..?'' `சப்புக்கொட்டி சாப்பிட்ட' பிரபல யூடியூபர் கைது...

தந்தி டிவி

ஸ்ரீ டிவி என்ற யூடியூப் சேனலை நடத்திவரும் பிரணை குமார் என்பவர், வேட்டையாட தடை செய்யப்பட்ட தேசிய பறவையான மயிலை பிடித்து சமைத்ததாக வீடியோ வெளியிட இணையத்தில் எதிர்ப்பு அதிகரித்தது. உடனடியாக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் பிரணை குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ததோடு, கறி குழம்பையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் போலீஸ் விசாரணையில் லைக், வியூவர்ஸ், சப்ஸ்கிரிப்ஷனை அதிகரிக்கவே அப்படி சொன்னதாகவும் உண்மையில் சமைத்தது கோழிக்கறி என பிரணைகுமார் தெரிவித்திருக்கிறார். இது கோழிக்கறியா.. மயில் கறியா என்பதை கண்டறிய போலீசார் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்