அதிமுக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்துள்ளார். நெல்லையை சேர்ந்த விஜிலா சத்யானந்த், அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர். இவர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து திமுகவில் தம்மை இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகளிருக்கு கொடுத்த முன்னுரிமை போல் தற்போது அதிமுகவில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என புகார் கூறினார்.