தமிழ்நாடு

சென்னை தனியார் கல்லூரி விழாவில் தமிழில் பேசிய வெங்கையா நாயுடு

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ. சிதம்பரம் போன்றோரின் சிறப்புகளை நாம் மறந்து விட்டதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டினார். தாய் மொழிதான், நம்மை உயர்த்தும் என்றும், தாய்மொழி, தாய் நாடு, பிறந்த ஊர் உள்ளிட்டவற்றை என்றென்றும் மறக்கக்கூடாது எனவும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேற்கத்திய கலாச்சார மோகத்தால், நமது நாட்டு வரலாற்றை மறந்து வருவதாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்றோரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார். முன்னதாக, தனது பேச்சை,வெங்கையா நாயுடு தமிழில் தொடங்கினார். இங்குள்ள நல்ல விஷயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.மேற்கத்திய கலாச்சார மோகத்தின் விளைவாக, வெளிநாட்டில் இருப்பவை மட்டும் தான் சிறந்தவை என நினைக்கிறோம். அது உண்மையல்ல. ராபர்ட் கிளைவ் தான் சிறந்தவர் என வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. நம்மை ஏமாற்றிய ஒருவரை சிறந்தவர் என அழைக்கிறோம். வீரபண்டிய கட்ட பொம்மன், முத்துராமலிங்க தேவர், வ.உ. சிதம்பரம், பாரதி, சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோரை நாம் மறந்து விட்டோம்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி