தமிழ்நாடு

Thiruttani | Vehicles | திருத்தணி மலையில் குவிந்த வாகனங்கள் முருகன் பக்தர்கள் வைத்த கோரிக்கை

திருத்தணி மலையில் குவிந்த வாகனங்கள் முருகன் பக்தர்கள் வைத்த கோரிக்கை

thanthitv

திருத்தணி மலையில் குவிந்த வாகனங்கள் முருகன் பக்தர்கள் வைத்த கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஞாயிறு விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மணமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். மேலும், அதிகாலை முதலே பக்தர்கள் வாகனங்களில் குவிந்ததால் மலைக்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் நெரிசல் மேலும் அதிகரித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Thiruttani #Vehicles #thanthitv

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு