வீட்டில் தனியாக இருந்த சிறுவன் | வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்
வாணியம்பாடியில் சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை கொள்ளை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாகிராபாத்தை சேர்ந்த ஷகீல் அஹ்மத் வீட்டில் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது, அவரது மகன் சுஃபியான் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், மயக்க மருந்து நனைத்த துணியின் மூலம் சிறுவனை அழுத்தி மயக்கம் அடைய செய்துள்ளார்... தொடர்ந்து, பீரோவை உடைத்து 7 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். குடும்பத்தினர் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.