Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை
Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை #KallakurichiMLA #ArulVignesh #TNPolice காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆலோசனை. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் (PSO) விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர்கள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே ஆலோசனை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானவாசும் அங்கிருந்து புறப்பட்டார்.
