விழுப்புரம் அருகே, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசார் முன்னிலையிலேயே இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணை அருகே உள்ள ஆயந்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது, சரக்கு வாகனத்தில் சென்றவர்கள் குறுக்கே வந்ததால் விநாயகர் ஊர்வலம் ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் தாமதமானதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில், விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களும், சரக்கு வாகனத்தில் இருந்தவர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் இருந்த நிலையில், அவர்கள் கண்முன்னரே இருதரப்பினரும் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.