புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில், வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டினுள் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகநாதன் என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், வ.உ.சி நகரை சேர்ந்த மாலதி என்ற பெண்ணுக்கு சிறு பொட்டலங்களாக விற்பனைக்கு கொடுப்பதும் அவற்றை குடியிருப்பு பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.