தமிழ்நாடு

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, செருதூர், நாகூர் ஆகிய கடற்கரையில் அதிகாலையில் பொதுமக்கள் திரண்டனர். உயிர்நீத்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்தனர். திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவுதினத்தை அனுசரிக்கும் வகையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. வேளாங்கண்ணியில் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தனர்.

சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி வேளாங்கண்ணியில் பொதுமக்கள் மௌன ஊர்வலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இதேபோல் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அரசு கலை கல்லூரி முன்பு திரண்ட பொதுமக்கள், அங்கிருந்து கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர். அங்கு கடலில் பாலை ஊற்றியும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். சில பெண்கள் கடற்கரையில் ஒன்று கூடி, சுனாமியில் இறந்தவர்களை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

BREAKING || தடாலடியாக குறைந்த தங்கம்... திடீர் சர்ப்ரைஸ் - நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

BREAKING || நேபாளை விழுங்கிய பெருவெள்ளம்... அதே இடம் இன்று எப்படி இருக்கு தெரியுமா? புது வீடியோ

Nepal Disaster | நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் - வெளியுறவு துறை விளக்கம்

BREAKING || "தலித் மக்களை வைத்து அரசியல் செய்யாதீங்க..."- வன்னிஅரசு சொன்னதும் கொந்தளித்த திமுகவினர்

TN Assembly | அமைச்சர் ஆதவ் ஒரு கேள்வி என்று சொன்ன வேகத்தில் சட்டென்று கொந்தளித்த எதிர்க்கட்சி