திருச்சியை நோக்கி வந்த ஏர் ஏசியா விமானம் - நடுவானிலேயே திடீரென உயிரிழந்த பயணி..
திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிக்கு, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு நடுவானிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த இளையான்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நடுவானிலேயே அவர் உயிரிழந்ததார். திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தவுடன் அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.