தமிழ்நாடு

TRB | `TRB’ போல `HERB’ - ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போரே.. எல்லாமே மாறுது

TRB | `TRB’ போல `HERB’ - ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போரே.. எல்லாமே மாறுது

thanthitv

`TRB’ போல `HERB’ - ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போரே.. எல்லாமே மாறுது

உயர்கல்வித்துறைக்கு தனித் தேர்வு வாரியம் அமைக்கப்பட உள்ளதாகவும், கல்லூரி விழாக்களில் சமூக வலைதளப் பிரபலங்களை அழைப்பதைத் தவிர்க்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து உயர்கல்வித் துறையைப் பிரித்து, உயர்கல்விக்கெனத் தனித் தேர்வு வாரியம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், இதன் மூலமே உயர்கல்விக்கான ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் உயர்கல்வித்துறையின் கீழ் நேரடியாக இடம் பெற வேண்டும் என்ற நோக்கில், ஹெர்ப் (HERB - Higher Education Recruitment Board) எனப்படும் உயர்கல்வித் தேர்வு வாரியத்தைத் தனியாக அமைக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மிக விரைவாகத் தேர்வு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, உயர்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுக்கான அனுமதியும் விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கான அரசாணை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்வுகளுக்குச் சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களை அழைப்பதால், மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில், விழாக்களுக்கு யாரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்பது குறித்துப் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன

DGP Maheshkumar | கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - ``நடவடிக்கை..’’ - டிஜிபி மகேஷ்குமார் பரபரப்பு பேட்டி

Thiruparankundram Case | "சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்கவில்லை" - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

Thiruparankundram Issue | தி.குன்றம் தீப விவகாரம் எதிரொலி - அமைச்சர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

ADMK | EPS | "அனுமதி வாங்கிட்டு தான் பேசணும்" - நிர்வாகிகளுக்கு EPS அதிரடி அறிவிப்பு

Udhayanidhi | ``இப்படி ஒரு கேவலமான விஷயம் இந்தியாவிலேயே நடந்தது இல்ல..’’ - விளாசிய உதயநிதி