``கூண்டோடு எல்லா டீச்சர்களையும் டிரான்ஸ்பர் பண்ணுங்க’’ - 200 மாணவர்கள் எடுத்த முடிவு..தகிக்கும் அரசு பள்ளி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதிப் பாகுபாடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 256 மாணவர்கள் பயிலும் பள்ளியில், இன்று 50 மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்துள்ளனர். புதிய தலைமை ஆசிரியர் நியமனம், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்