தமிழ்நாடு

Chennai Car Driver Death|கார் மீது லேசாக உரசியதால் ஆத்திரம்-டிரைவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு

கார் மீது லேசாக உரசியதால் ஆத்திரம்-டிரைவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு

thanthitv

சென்னை சூளைமேட்டில், கார் மீது லேசாக உரசி விபத்து ஏற்படுத்தியதாக கூறி, மற்றொரு கார் ஓட்டுநரை கொடூரமாக தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு திருநகர் சிக்னல் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த கார் மீது, பின்னால் வந்த மற்றொரு கார் லேசாக மோதியுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள், மற்றொரு கார் ஓட்டுநரான கோயம்பேட்டை சேர்ந்த 53 வயது முருகையாவை தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகையாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜான் பெனடிக் தாஸ் மற்றும் பெருமாள் ஆகிய இருவரை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு