தமிழ்நாடு

சென்னையில் சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

சென்னையில் சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

thanthitv

சென்னையில் சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது சிறுவன் விபத்தில் சிக்கிய நிலையில் ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபாய பகுதியாக மாறும் வானகரம் சுங்கச்சாவடி : நேற்று விபத்து; இன்று விபத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு

தாய், கைக்குழந்தை, 5 வயது சிறுவன் விபத்தில் சிக்கிய நிலையில் 5 வயது சிறுவன் மரணம்

படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தாய் மற்றும் கை குழந்தை

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தால் பரிதாபம்

வானகரம் சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தாய், கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது சிறுவன் விபத்தில் சிக்கிய நிலையில் ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் க்ளோரி. இவர் திருவேற்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்து மூலமாக வருகை தந்து வானகரம் சுங்கச்சாவடியில் இறங்கி இருக்கிறார். அப்போது நெடுஞ்சாலையை குழந்தைகளுடன் கடக்க முயன்ற இவர் மீது கோயம்பேட்டிலிருந்து பூக்களை ஏற்றுக் கொண்டு சென்ற சரக்கு லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து வயது சிறுவன் ரியான் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தாய் மற்றும் கை குழந்தை இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே இடத்தில் நேற்று 50 வயது நபர் ஒருவர் சாலையைக் கடக்கும் போது விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு விபத்து நிகழ்ந்து சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வானகரம் சுங்கச்சாவடியில் பலரும் ஒருவழிப் பாதையில் செல்வதும், திடீரென சாலையை கடப்பதும், போதிய போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததும் அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து வானகரம் சுங்கச்சாவடியை அபாயகரமான பகுதியாக மாற்றியுள்ளது.

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை

Jananayagan | Arrest | வாக்கு எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்' படம்.. Enjoy செய்த ஊழியர் கைது

🔴LIVE : "குலுங்கிய மதுரை" மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..!

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை