சுங்கச்சாவடியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதல் நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, கட்டண உயர்வை அரசு புரிந்து கொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் அளவுக்கு அதிகமான சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், வாகன ஓட்டிகளிடம் நட்பாக நடந்து கொள்வது என்பது குறித்து சுங்கச்சாவடிகளின் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.