தமிழ்நாடு

முக்தி அடைந்தார் மூக்குப்பொடி சித்தர்...

பிரபல சாமியார் மூக்குபொடி சித்தர் இன்று அதிகாலை திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்.

தந்தி டிவி
திருவண்ணமாலைக்கு அடிக்கடி வரும் மூக்குப்பொடி சித்தர், கிரிவலப்பாதை, சாமியார் மடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சில மாதங்கள் தங்குவது வழக்கம். யாரிடமும் அதிகம் பேசாமலும் , சில சமயங்களில் மட்டுமே பேசும் மூக்குப்பொடி சாமியாரை காண அரசியல்வாதிகள், நடிகர்கள், இசைத்துறையினர் உள்ளிட்டோர் வந்து செல்வதுண்டு. விழுப்புரம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட மூக்குப்பொடி சித்தர், கடந்த சில நாட்களாக கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மூக்குப்பொடி சித்தர் முக்தி அடைந்தார். அவரது உடலுக்கு எராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூக்குப்பொடி சித்தரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR