முத்துப்பேட்டையில் ஓட்டுநரின் கவனக்குறைவால்
டூவீலர் மீது அரசு பேருந்து மோதி கணவன் கண்முன்னே மனைவி துடிதுடித்து பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் தனது மனைவி சரண்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது கொய்யாமுக்கம் பகுதி அருகே பின்னால் வந்த அரசு பேருந்து டூவீலர் மீது மோதியதில் சரண்யா, பேருந்து சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலியானார்.