கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர், மொச்சகொட்டாம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இன்னோவா கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டபோது, தனியார் நிறுவன ஓட்டுநர் துரைமுருகன் என்பவரிடம் 6 லட்சத்து 27 ஆயிரத்து 850 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.