தமிழ்நாடு

5 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட ஐந்து துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

அதன்படி, வண்டலூரை அடுத்த மேலக் கோட்டையூரில் தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் 16 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அதேபோல் தமிழகத்தில், உலக ஜுனியர் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் போட்டியை நடத்துவதற்காக, தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் காசோலையை அவர் வழங்கினார். சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 34 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்துள்ள அதிநவீன தொழில்நுட்ப பால் பதனிடும் தொழிற்சாலையையும் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 15 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை கட்டடங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

சுகாதார துறை சார்பாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். தேனி, மதுரை, நாகை, திருச்சி, கடலூர், விருதுநகர், அரியலூர், நெல்லை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்