தமிழ்நாடு

Tiruvannamalai | Rice | "30 ரூபாய் அரிசியும், ரேஷன் அரிசியும் ஒரே மாதிரி இருக்கே.." - பகீர் புகார்

Tiruvannamalai | Rice | "30 ரூபாய் அரிசியும், ரேஷன் அரிசியும் ஒரே மாதிரி இருக்கே.." - பகீர் புகார்

thanthitv

#Tiruvannamalai #RationRice #RationShop #ThanthiTV Tiruvannamalai | Ration Rice | "30 ரூபாய் அரிசியும், ரேஷன் அரிசியும் ஒரே மாதிரி இருக்கே.." - பகீர் கிளப்பிய புகார்.. தி.மலையில் பரபரப்பு திருவண்ணாமலையில், கூட்டுறவு சிறப்பங்காடியில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் போல இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியிலும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் போல இருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் பார்த்திபன் ஆய்வு செய்தபோது, அரிசி பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரிசி விற்பனையை நிறுத்தவும், மூட்டைகளைத் திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 20 டன் அரிசியில், தஞ்சாவூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 டன் அரிசி திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் இருந்து 12 டன் சன்னரக அரிசி விற்பனைக்காக வரவழைக்கப்பட்டது.

Breaking | Kovai | TN Police | கோவை மாணவன் விவகாரம் | கமிஷனருக்கு பறந்த உத்தரவு

BREAKING || அமைச்சர்கள் கொடுத்த உறுதி - "வாபஸ்" என அறிவித்த விவசாயிகள்

Breaking | Puzhal Jail Escape | புழல் சிறையில் இருந்து தப்பியோடிய இன்னொரு கைதியும் சிக்கினான்

TN Rains | NE Monsoon | கொட்டிய கனமழை | வேரோடு சாய்ந்த மரங்கள்

BREAKING || ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - மனிஷாவுக்கு CM விஜய் பாராட்டு