TN Rains | NE Monsoon | கொட்டிய கனமழை | வேரோடு சாய்ந்த மரங்கள்
TN Rains | NE Monsoon | கொட்டிய கனமழை | வேரோடு சாய்ந்த மரங்கள் #TNRains #NEMonsoon #Rainalert #rain #rainnews #rainupdate #thanthitv தாளவாடியில் கனமழை - பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால், நீரோடைகளில் நீர் செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.. ராமநாதபுரத்தில் கனமழை - வேரோடு சாய்ந்த மரத்தால் மின்சாரம் துண்டிப்பு ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அரண்மனை, பேராவூர், சூரங்கோட்டை, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். அரண்மனை அருகே பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் கொட்டும் மழையால் சாய்ந்த ராட்சத மரம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சேர்வராயன் கோவில் சாலையில் ராட்சத மரம் சாய்ந்ததில், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மூன்று கிலோமீட்டருக்கும் மேல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன; சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்களும் மின்துறை ஊழியர்களும் விரைந்து வந்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மரத்தை அகற்றினர்.
