தமிழ்நாடு

"அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட தயார்" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

கடந்த 3 ஆண்டுகளில் தாம் செய்தது குறித்து பட்டியலிட தயாராக உள்ளதாகவும், தி.மு.க. ஆட்சியில் செய்ததை பட்டியலிட அவர்கள் தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பிரசாரத்தில், அமைச்சர் இருந்தும் எந்த பலனும் இல்லை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றசாட்டியிருந்தார். இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆரணி ஓன்றியங்களில் உள்ள பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சேவூர் ராமசந்திரன், முள்ளண்டிரம் சிறுமூர் அரியப்பாடி எஸ்.வி. நகரம் பையூர் வடுகசாத்து உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கடந்த 3 ஆண்டுகளில் தாம் செய்தது குறித்து பட்டியலிட தயாராக உள்ளதாகவும், தி.மு.க. ஆட்சியில் செய்ததை பட்டியலிட அவர்கள் தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்