திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வடாரண்யேஸ்வரர் கோவிலின் கல்தூண் மண்டபத்தின் மேல்தளம் திடீரென இடிந்துவிழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்... திருத்தணி முருகன் கோவிலின் உபகோயிலான இங்கு 100 கால் மண்டபம் ஒன்று உள்ளது... கோவிலில் வளர்க்கப்படும் மாடுகளுக்கான வைக்கோல் கல்தூண் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது... கடந்த 25ஆம் தேதி வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது... அதை தீயணைப்பு வீரர்கள் அணைத்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மண்டபத்தின் மேல்தளம் இடிந்து விழுந்துள்ளது...