திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, உள்ள ஆயில் குடோனில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தண்டல்கழனியில், ஆயில், மரச் சாமான்கள் மற்றும் அட்டைபெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று, அதிகாலை அந்த கிடங்குகளில் இருந்து திடீரென புகை வந்ததை கண்ட காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 5 வாகனங்ள் மூலம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.