திருப்பூரில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கோரி, ஓடும் நீரில் குளித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் வழிந்தோடி, கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று சாலையில் ஓடும் நீரில் குளித்தும், துணிகளை துவைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.