தமிழ்நாடு

"குழந்தையை இதற்காக தான் நான் கடத்தினேன்" - பெண் போலீசார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

தந்தி டிவி

தெலங்கானாவை சேர்ந்த ஒரு தம்பதி, தனது 3 வயது குழந்தையுடன் திருப்பதி கோயிலுக்கு வந்திருந்தனர். பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் தங்கி இருந்த போது, அவர்களின் குழந்தை மாயமானது. இதுகுறித்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரிக்கையில், குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிரமாக தேடினர். இதனையடுத்து, திருப்பதியில் ஸ்ரீனிவாசம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், குழந்தை மீட்கப்பட்டு, கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கு குழந்தை இல்லாததால், வளர்ப்பதற்காக இந்த குழந்தையை கடத்தினேன் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்