தமிழ்நாடு

மனநலம் பாதித்தோரை காக்க 6384549613 அழையுங்கள்

திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிறப்பு தொலைபேசி எண் வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிறப்பு தொலைபேசி எண் வெளியிட்டுள்ளார். அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்த அவர் சிறப்பு தொலைபேசியை எண்ணை வெளியிட்டார். கிரிவலப் பாதை, பேருந்து நிலையம், சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோர் இருப்பதாக கூறிய ஆட்சியர் கந்தசாமி, ஆதரவற்றோர், வீட்டை விட்டு வெளியேறியோர் உள்ளிட்டவர்களை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் உறவினர்களிடம் சேர்க்க ஏதுவாக சிறப்புத் தொலைபேசி எண்ணில் அழைக்குமாறு கூறியுள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அளிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

NEET | NTA | நீட் சர்ச்சை.. கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்.. உள்ளே இறங்கிய புது Force

Delhi | உயிர்தப்பி நாடு திரும்பிய தமிழர்கள்... வரவேற்ற தமிழக அமைச்சர்கள்...கண்ணீர் வரவைக்கும் காட்சி

BREAKING || தலைசுற்ற வைத்த தங்கம் விலை..மாலையில் கிடுகிடு உயர்வு

BREAKING || நேபாள நிலவரம் - தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த முக்கிய தகவல்

Union Govt | School Education | "ரூ.5,109 கோடி.. இதுவரை தராத மத்திய அரசு.." - பள்ளிக்கல்வித் துறை