திருவண்ணாமலையில் 2,668 அடி உயர தீபமலையில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. அந்தச் சூழலிலும் மகாதீபத்தின் ஒளி பிரகாசமாகத் தெரிந்த நிலையில், ஜோதி ரூபமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்