திருவள்ளூரில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்தி முனையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பூச்சி அத்திப்பேடு பகுதியில் உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அலுவலகத்திற்கு நுழைந்து ஊழியர்களான முரளி, முருகன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறித்துவிட்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.