திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் விடுமுறை தினம் என்பதால் குவிந்த பக்தர்கள். சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், ஆறு மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலை கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.