தமிழ்நாடு

நவராத்திரி கொலு - பார்வையாளர்கள் வியப்பு

தேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

தேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நவராத்திரியையொட்டி சிறுவர்- சிறுமியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியும் அரங்கேறியது.

சீதைக்கு அனுமன் காட்சி தரும் வைபவம்

நவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணம் ராமர் கோயிலில், சீதைக்கு அனுமன் காட்சி தரும் வைபவம் நடந்தது. உற்சவர் மண்டபத்தில் ராமர் சீதை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சுமார் 12 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வை ஏராளமான பக்தி பரவசத்துடன் பார்த்த பக்தர்கள், ராமர், சீதை, அனுமனை தரிசனம் செய்தனர்.

நவராத்திரி - பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை

நவராத்திரியை ஒட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் பத்திரகாளி அம்மனுக்கு குங்கும நாயகி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொலு மண்டபத்தில் விநாயகர், பெருமாள், சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் மற்றும் கொலு பொம்மைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

உஜ்ஜயினி மாகாளி கோயில் நவராத்திரி உற்சவம்

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் காவல் தெய்வமாக உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. சிங்கேரி மடத்திலிருந்து நான்கு ரத வீதிகள் வழியாக மேள தாளங்கள் முழங்க பால் குடம் எடுத்து வந்து உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதன்பிறகு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உள்ளூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பர்வதவர்த்தினி கோயில் நவராத்திரி உற்சவம்

ராமேஸ்வரத்தில், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி, மகாலட்சுமி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொலு மண்டபத்தில் உள்ள சக்கரத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு